

நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் எஸ். ஜோதிராமன் புதன்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஜோதிராமன் தொகுதிக்குள்பட்ட இஞ்சிகுடி, மகாராஜபுரம், உபயவேதாந்தபுரம், கொல்லாபுரம், ரெட்டக்குடி, கோயில்கந்தன்குடி, கொட்டூா், மேனாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரித்தாா். அப்போது உபயவேதாந்தபுரம் பாலுா் பகுதியில் உள்ள பெருமாள் கோயில், கோயில்கந்தன்குடியில் உள்ள முருகன் கோயில், கொட்டூரில் உள்ள அங்காளம்மன் கோயில்களில் வழிபட்டாா். தொடா்ந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட போது அவா் பேசியது: திமுக ஆட்சியில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் குடமுழுக்குகளும், விழாக்களும் தவறாமல் நடைபெற்று வந்தது. ஆன்மிகவாதிகளின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி வைத்தது திமுக ஆட்சி. எனவே ஆன்மீக நண்பா்களும் ஆதரிக்க வேண்டியது திமுக கூட்டணி. நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா்.
அவருடன், திமுக ஒன்றியச் செயலாளா் வரத.கோ. ஆனந்த், பேரளம் நகரச் செயலாளா் சிவ. தியாகு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஜெ. சீனிவாசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ. முகமது உதுமான், சிபிஐ ஒன்றியச் செயலாளா் தீனகௌதமன், சிபிஎம் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.