

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் படகில் தூங்கிய மீனவரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனி செந்தூர்பாண்டி மகன் தங்கராஜா என்ற ராஜா (21). சங்கு குழி மீனவரான இவர் மீது வடபாகம் காவல் நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் திரேஸ்புரம் கடற்கரையில் சங்கு எடுக்கச் செல்லும் ஒரு நாட்டுப் படகில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் திங்கள்கிழமை காலை ராஜா இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ராஜாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜா எவ்வாறு, எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும், கொலை செய்யப்பட்ட மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.
அப்பகுதியில் ஏற்கெனவே ஒரு கொலை சம்பவம் நடைபெற்றிருந்த நிலையில், இரு நாள்களில் இரண்டாவது கொலை நடந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.