தஞ்சாவூர் - திருச்சி ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்

சோளகம்பட்டி - தஞ்சாவூர் இடையேயான இரட்டை ரயில் பாதையில் பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் புதன்கிழமை (மார்ச் 7) முதல் 27-ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுகிறது.
Updated on
1 min read

சோளகம்பட்டி - தஞ்சாவூர் இடையேயான இரட்டை ரயில் பாதையில் பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் புதன்கிழமை (மார்ச் 7) முதல் 27-ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சோளகம்பட்டி - தஞ்சாவூர் இடையேயான இரட்டை ரயில் பாதையில் பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மார்ச் 7-ம் தேதி முதல் 21 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
மயிலாடுதுறை - திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் புதன்கிழமை முதல் 27-ம் தேதி வரையும், திருச்சி - தஞ்சாவூர் - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண் 76824, 76827) மார்ச் 10, 17, 24-ம் தேதிகளிலும், மற்றொரு ரயில் (வண்டி எண் 76822, 76829) மார்ச் 27-ம் தேதியும், திருச்சி - மயிலாடுதுறை - திருச்சி பயணிகள் ரயில் மார்ச் 27-ம் தேதியும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
கோவை - மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி விரைவு ரயில் சேவையில் திருச்சி - மயிலாடுதுறை இடையே செவ்வாய்க்கிழமை நீங்கலாக புதன்கிழமை முதல் 27-ம் தேதி வரையும், திருச்சி - சென்னை எழும்பூர் ரயில் சேவையில் திருச்சி - கும்பகோணம் இடையே மார்ச் 27-ம் தேதியும், மயிலாடுதுறை - திருநெல்வேலி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் சேவையில் திருச்சி - மயிலாடுதுறை இடையே புதன்கிழமை முதல் 27-ம் தேதி வரையும், மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில் சேவையில் கும்பகோணம் - தஞ்சாவூர் இடையே மார்ச் 27-ம் தேதியும், காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் சேவையில் சாலியமங்கலம் - திருச்சி இடையே மார்ச் 27-ம் தேதியும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் புதன்கிழமை முதல் மார்ச் 27-ம் தேதி வரை காரைக்காலில் இருந்து பிற்பகல் 12.30 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், சென்னை எழும்பூர் - திருச்சி விரைவு ரயில் மார்ச் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.30 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு, இதே ரயில் மார்ச் 27-ம் தேதி காலை 10.30 மணிக்கும் தாமதமாகப் புறப்படும்.
புவனேஸ்வர் - ராமேசுவரம் விரைவு ரயில் மார்ச் 24-ம் தேதி 75 நிமிடங்களும், மண்டுவாதிக் - ராமேஸ்வரம் விரைவு ரயில் மார்ச் 27-ம் தேதி 30 நிமிடங்களும், சென்னை எழும்பூர் - திருச்சி விரைவு ரயில் புதன்கிழமை முதல் மார்ச் 20-ம் தேதி வரை 30 நிமிடங்களும் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com