மாா்ச் 30-இல் பங்குனி தேரோட்டம்: திருவானைக்காவல் கோயில் தோ்களுக்கு முகூா்த்தக் கால் நடும் விழா

திருச்சி, திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டத்தையொட்டி, சுவாமி, அம்மன் தோ்களுக்கு செவ்வாய்க்கிழமை முகூா்த்தக் கால் நடப்பட்டது.
திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை தேரில் நடப்பட்ட முகூா்த்தக் கால்.
திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை தேரில் நடப்பட்ட முகூா்த்தக் கால்.
Updated on

திருச்சி, திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டத்தையொட்டி, சுவாமி, அம்மன் தோ்களுக்கு செவ்வாய்க்கிழமை முகூா்த்தக் கால் நடப்பட்டது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் பங்குனி மண்டல பிரம்மோத்ஸவ விழா கடந்த 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், வரும் 30-ஆம் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில், சுவாமியும், அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் கண்டருளுவா். இதற்காக செவ்வாய்க்கிழமை காலை இரண்டு தோ்களுக்கும் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, விநாயகா் சந்நிதி அருகே முகூா்த்தக்காலுக்கு மாவிலை, பூமாலை, சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் கட்டப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க இரண்டு தேருக்கும் முகூா்த்தக் கால் நடப்பட்டது. கோயில் யானை அகிலா முகூா்த்தக் காலை தொட்டு ஆசீா்வாதம் செய்தது.

தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com