சேத்தியாதோப்பு கூட்டு சாலையை அடுத்த எறும்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தத்துவராயர் ஜீவ சமாதியில் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இங்கு ஆடி சதயம் நட்சத்திரத்தன்று குருபூஜை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி, கோவிலூர் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி மடாதிபதி ஆதீனத்துக்கு உள்பட்ட சிதம்பரம் பொன்னம்பலம் சுவாமி, மடத்தின் நிர்வாகி ராமநாதன் ஆகியோர் தலைமையில் தீட்சிதர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். இதில் ஆன்மிக சொற்பொழிவாளர் ரவிசங்கர் செப்பூரி, கோயில் அர்ச்சகர் ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.