புதுச்சேரி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

புதுச்சேரி, விழுப்புரம் வழியாக வெள்ளி,  சனிக்கிழமைகளில் (ஆக.31, செப்.1) இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

புதுச்சேரி, விழுப்புரம் வழியாக வெள்ளி,  சனிக்கிழமைகளில் (ஆக.31, செப்.1) இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே சார்பில்  வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 
விழுப்புரம் ரயில் சந்திப்பில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மதுரை பயணிகள் ரயில் (எண்-56705) ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 4.30 மணிக்கு புறப்படும். 
அதேபோல, சென்னை எழும்பூர்-மதுரை செல்லும் வைகை விரைவு ரயில் (எண்-12635) முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நிறுத்தப்படும். 
திருப்பதி-புதுச்சேரி, புதுச்சேரி-திருப்பதி இரு வழித்தடத்தில் செல்லும் திருப்பதி பயணிகள் ரயில்கள் (எண்கள்-56041, 56042 ) முண்டியம்பாக்கம்-புதுச்சேரி இடையே மட்டும் சனிக்கிழமை (செப்.1) இயக்கப்படும்.  மேல்மருவத்தூர்-விழுப்புரம்-புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில்கள் (எண்கள்-66045,  66046) முண்டியம்பாக்கம்-விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் இருவழி மார்க்கத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் (வண்டி எண்கள்-56037 / 56038) முண்டியம்பாக்கம்-புதுச்சேரி-முண்டியம்பாக்கம் வழித்தடத்தில் மட்டுமே வெள்ளிக்கிழமை இயக்கப்படும். சென்னை எழும்பூர்-மதுரை இடையிலான வைகை விரைவு ரயில் எழும்பூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 45 நிமிடங்கள் தாமதமாக 2.25 மணிக்கு புறப்படும்.  
திருச்சி-சென்னை எழும்பூர் இடையிலான சோழன் விரைவு ரயில் (வண்டி எண்-16796) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக  2 மணி நேரம் தாமதமாக 12 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com