தருமபுரி அருகே சிறுமியை சில்மிஷம் செய்ததாக கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தருமபுரி அருகே இண்டூரைச் சேர்ந்த 12 வயதான சிறுமி அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டில் இருந்த சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சிவானந்தம் (25) சில்மிஷம் செய்தாராம்.
இதுகுறித்து இண்டூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவானந்தத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.