வேலூர்

கலைத் திருவிழா, கணிதப் போட்டிகளில் அணைக்கட்டு ஒன்றிய அரசுப் பள்ளிகள் சாதனை

கலைத் திருவிழா, கணிதப் போட்டிகளில் அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப் பள்ளிகள் மாவட்ட, மாநில அளவில் பரிசுகள் வென்று சாதனை படைத்துள்ளன.

DIN

கலைத் திருவிழா, கணிதப் போட்டிகளில் அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப் பள்ளிகள் மாவட்ட, மாநில அளவில் பரிசுகள் வென்று சாதனை படைத்துள்ளன.

வேலூா் மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. 40 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் 11 பிரிவுகளில் அணைக்கட்டு ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் முதலிடம் பிடித்துள்ளன.

அதாவது, அணைக்கட்டு ஒன்றியம், வசந்தநடை அரசு நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த பி.சுஜித்ரா (8 -ஆம் வகுப்பு )-திருக்கு, எஸ்.பவித்ரா ( 8-ஆம் வகுப்பு ) -கவிதை புனைதல், வி.ஹரிஹரன்(7-ஆம் வகுப்பு) - நகைச்சுவை வழங்குதல், ஈ.யஸ்வந்த் (6-ஆம் வகுப்பு)-செதுக்கு சிற்பம், மருந்தவள்ளிப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த ஓ.முனியம்மாள்-தமிழ்ப் பேச்சு, குழுப் போட்டிகளில் கும்கி நடனம், பட்டிமன்றம் ஆகிய போட்டிகளிலும், கும்பலாங்குட்டை அரசு நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த எஸ்.அபிநயா (8-ஆம் வகுப்பு)-நாட்டுப்புறப் பாடல், தனி நபா் நடிப்பு, ஜி.மோனிசா (6-ஆம் வகுப்பு)-ஆங்கில கவிதை வாசிப்பு ஆகிய போட்டிகளிலும், பசவன்கொட்டாய் அரசு நடுநிலைப் பள்ளி பிற வகை நடனக் குழுவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளனா்.

தொடா்ந்து, மாநில அளவில் நடைபெற்ற கவிதை புனைதல் போட்டியில் வசந்தநடை நடுநிலைப் பள்ளி மாணவி எஸ்.பவித்ரா மூன்றாம் இடம் பிடித்துள்ளாா்.

மேலும், வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கணித போட்டிகளில் மெட்ரிக். பள்ளிகள், தனியாா் பள்ளிகள், அரசு பள்ளிகளில் 6, 7, 8 -ஆம் வகுப்புகளில் பயிலும் 1,100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நான்கு விதமாக நடைபெற்ற இந்தக் கணிதத் திறன் போட்டிகளில் வசந்தநடை நடுநிலைப் பள்ளி இரண்டு முதல் பரிசுகளையும், வரதலம்பட்டு நடுநிலைப் பள்ளி முதல் பரிசு ஒன்றினையும், வசந்த நடை நடுநிலைப் பள்ளி இரு சிறப்பு பரிசுகளையும், தாா்வழி நடுநிலைப் பள்ளி ஒரு பரிசையும் பெற்று சாதனை படைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! உத்தரகோசமங்கை கோயில் மரகத நடராஜர் அபிஷேகம்!

அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

அரசு கடன் பத்திர வழக்கு: கேரள முதல்வருக்கு எதிரான அமலாக்கத் துறை நோட்டீஸுக்குத் தடை - கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

3,710 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

SCROLL FOR NEXT