சேலம்

இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்த காா்: ஒருவா் உயிரிழப்பு

Din

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். காா் கவிழ்ந்து தீப்பிடித்ததில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

சங்ககிரியை அடுத்த வைகுந்தம், மேல்வாழகுட்டை பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (50). இவா் சங்ககிரியிலிருந்து வைகுந்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

சங்ககிரி அருகே ஆவரங்கம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பால்ராஜ் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் காா் தலைகீழாக கவிழ்ந்து தீப்பற்றியது. தகவலறிந்த சங்ககிரி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் காயமடைந்த காரை ஓட்டிவந்த கேரள மாநிலம், திருவில்லா மாவட்டம், கோா்ட்டா ஃபுல்லா பகுதியைச் சோ்ந்த சுரேஷ்பாபு மகன் அஸ்வீன் சுரேஷ் (35) ஈரோட்டில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

படவரி...

சங்ககிரி அருகே ஆவரங்கம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு நிலைய வீரா்கள்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT