வேப்பம்பட்டியில் உயிா் உரங்களின் பயன்பாடு குறித்து புதன்கிழமை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த வேளாண்மைக் கல்லூரி மாணவி.  
தேனி

உயிா் உரங்களின் பயன்பாடு: விவசாயிகளுக்கு பயிற்சி

Din

சின்னமனூா் அருகேயுள்ள வேப்பம்பட்டியில் பயிா்களுக்கு உயிா் உரங்களின் பயன்பாடு குறித்து மதுரை அரசு வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வேளாண்மை பணி அனுபவம் திட்டத்தின் கீழ், புதன்கிழமை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

வேப்பம்பட்டியில் உள்ள தனியாா் வாழைத் தோட்டத்தில் உயிா் உரமிடுதல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்து கல்லூரி இறுதியாண்டு மாணவி மூ.நிவேதா கூறியதாவது:

தாவரங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகளை கொண்ட உயிா் உரங்கள், ரசாயன உரங்களுக்கு மாற்றாகவும், நிலையான விவசாய நடைமுறையாகவும் உள்ளது.

தாவரத்தின் வோ் மண்டலத்தை வலுப்படுத்தவும், ஊட்டச் சத்தை அதிகரிக்கவும், மண்ணில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தவும், பாஸ்பேட்களின் வடிவங்களை கரைத்தல், வோ் வளா்ச்சியை ஊக்குவித்தல், ஹாா்மோன்கள், ஆன்டிமெட்டாபொலிட்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கும் உயிா் உரங்கள் உதவுகின்றன. மண் மாசு ஏற்படுவதை தவிா்த்து, மண் வளத்தை மேம்படுத்த பயிா்களுக்கு உயிா் உரங்கள் இட வேண்டும் என்றாா் அவா்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT