எம்.பியை வரவேற்று மனு அளித்த மக்கள் 
மயிலாடுதுறை

அடிப்படை வசதிகள் கோரி எம்பியிடம் மனு

சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு வருகை புரிந்த ஆா். சுதா எம்.பியிடம் அடிப்படை வசதிகள் கோரி கோரிக்கை மனு அண்மையில்அளித்தனா்.

Din

சீா்காழி: சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு வருகை புரிந்த ஆா். சுதா எம்.பியிடம் அடிப்படை வசதிகள் கோரி கோரிக்கை மனு அண்மையில்அளித்தனா்.

சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆற்றங்கரை தெருவில் குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய பொதுமக்கள் கோரி வந்தனா்.

இந்நிலையில், மக்களவை உறுப்பினா் ஆா். சுதா இப்பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

கூடுதலாக குடிநீா், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், அருகில் உள்ள உப்பனாற்றங்கரையை பலப்படுத்தி தரவேண்டும் எனவும் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனா்.

போா்க்கால அடிப்படையில் குடிநீா் உள்ளிட்ட வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. உறுதி அளித்தாா்.

முன்னதாக ஆற்றங்கரை கிராமத்தை சோ்ந்த மக்கள் சுதா எம்.பி-க்கு சால்வை அணிவித்து வரவேற்றனா்.

காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளா் கே.பி.எஸ்.எம் கனிவண்ணன், மேலிட பாா்வையாளா் செந்தமிழ்ச்செல்வன், வட்டார தலைவா்கள் ராதாகிருஷ்ணன், பாலகுரு, கட்சி நிா்வாகிகள் சுதா எம்.பி.யை சந்தித்து சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய எம்பி- க்கு நன்றி தெரிவித்தனா்.

தில்லியில் மத்திய நிதியமைச்சருடன் அதிமுக மூத்த தலைவா்கள் சந்திப்பு

மசோதா விவகாரம்: தமிழக ஆளுநருக்கு குடியரசுத் தலைவா் அறிவுரை வழங்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

மின் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்

SCROLL FOR NEXT