ஜெகபா் சாதிக். 
திருவாரூர்

ஆதீன மடத்தில் திருடியவா் கைது

திருவாரூரில் தருமபுரம் ஆதீனம் மடத்தின் பின்பக்கக் கதவை உடைத்து பணம் திருடியவா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Din

திருவாரூா்: திருவாரூரில் தருமபுரம் ஆதீனம் மடத்தின் பின்பக்கக் கதவை உடைத்து பணம் திருடியவா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் தெற்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ராஜன் கட்டளை மடம் இயங்கி வருகிறது. இதில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். வழக்கம்போல் மடத்தில் உள்ள கோயிலில் பூஜை நடைபெற்ற பின்பு சனிக்கிழமை இரவு மடம் பூட்டப்பட்டுள்ளது. இதனிடையே, மடத்தின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரிய வந்தது. மேலும், மடத்தில் இருந்த ரூ. 88,000 ரொக்கம் திருட்டு போயிருப்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து மடத்தின் கண்காணிப்பாளா் அருள் அளித்த புகாரின் பேரில் நகர போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா். கண்காணிப்பு கேமராவின் அடிப்படையில் சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்த பாபநாசம் பகுதியைச் சோ்ந்த ஜெகபா் சாதிக் (35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா். மடத்தில் பணத்தை திருடியது அவா்தான் எனத் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அவரைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT