கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020-இன் படி கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையிலும் மீனவா்கள் இழுவலை விசைப்படகுகள் அல்லது தூண்டில், வழிவலை விசைப்படகினை பயன்படுத்தி மீன்பிடிப்பது 61 நாள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மீன்பிடி தடைக்காலத்தில் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடும் நபா்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT