செய்திகள்

96 - 2 திட்டத்தில் பிரேம் குமார்!

96 இரண்டாம் பாகம்...

DIN

96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டமிருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27-வது படமாகும். இப்படத்துக்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டுள்ளனர். இதன், டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் பிரேம் குமார், ”96 படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதிவிட்டேன். நான் எழுதியதில் எனக்கு மிகவும் நெருக்கமானது இதுதான். விஜய் சேதுபதியின் மனைவிடம் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்தாக, இதைப் படமாக்கும் ஆர்வமுள்ளது. இயற்கை என்ன திட்டம் வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை. பார்ப்போம்” எனக் கூறியுள்ளார்.

நிறைவேறாத காதல் கதையாக உருவான 96 திரைப்படம் வெளியானபோது பலரிடமும் நெகிழ்ச்சியை உருவாக்கியது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றுவரை ரசிகர்களின் தனிமைக்கும், நினைவுகளுக்குமான நல்ல பாடல்களாக இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT