நூல் அரங்கம்

சோழர் செப்பேடுகள்

சோழர் செப்பேடுகள் - நடன. காசிநாதன்; பக்.144; ரூ.100; சேகர் பதிப்பகம், சென்னை-78, )044-65383000. சோழப் பேரரசர்களான சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடு, அவரது மைந்தன் முதலாம் ராஜராஜனின் பெரிய லெயிடன் செப்

நடன.காசிநாதன்

சோழர் செப்பேடுகள் - நடன. காசிநாதன்; பக்.144; ரூ.100; சேகர் பதிப்பகம், சென்னை-78, )044-65383000.

சோழப் பேரரசர்களான சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடு, அவரது மைந்தன் முதலாம் ராஜராஜனின் பெரிய லெயிடன் செப்பேடு, அவரது மகன் முதலாம் ராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு, அவரது மகன்களில் ஒருவரான வீரராஜேந்திரனின் சாரலா செப்பேடு, முதலாம் ராஜேந்திரனின் மகள் வயிற்றுப் பெயரனான முதலாம் குலோத்துங்கனின் சிறிய லெயிடன் செப்பேடு ஆகிய செப்பேடுகளின் தமிழ்ப் பகுதிகளின் மூலம் அடங்கிய நூல் இது. மேலும், முதலாம் ராஜாதிராஜன் காலத்திய திருஇந்தளூர்ச் செப்பேடுகள் குறித்த சிறுகுறிப்புகள் (மூலம் இல்லாமல்) சேர்க்கப்பட்டுள்ளன. சில செப்பேடுகள், முத்திரைச் சின்னங்களின் புகைப்படங்கள் நூலில் இணைக்கப்பட்டுள்ளன. செப்பேடுகளின் மூலம் மட்டுமே உள்ளதால் எளிமையாகப் படித்துப் புரிந்துகொள்வது சற்று கடினம். இத்துறையில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுவோருக்கு பேருதவி புரியும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT