சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் 40-ஆவது ஆண்டு விழா செப்டம்பர் 17, 18 மற்றும் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
சிங்கப்பூரில் உள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இந்த விழா நடைபெறுகிறது.
இவ்விழாவுக்கு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை வகிக்கிறார். விழாவில், சிங்கப்பூர் அமைச்சர்கள், சொற்பொழிவாளர்கள் பங்கேற்கின்றனர். நிறைவு நாள்
நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உரை நிகழ்த்துகிறார். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் உள்ள ஏராளமான தமிழ் எழுத்தாளர்கள் பங்குபெறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.