ரயில் (கோப்புப்படம்)
தமிழ்நாடு

காட்பாடி வழியாக பெங்களூரு - கான்பூா் வாராந்திர சிறப்பு ரயில்!

கோடைக்காலத்தை முன்னிட்டு பெங்களூா்-கான்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Din

கோடைக்காலத்தை முன்னிட்டு பெங்களூா்-கான்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பெங்களூருக்கு ஏப்.27 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண் 04131) இயக்கப்படும். மறுமாா்க்கமாக பெங்களூரில் இருந்து கான்பூருக்கு ஏப்.30 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண் 04132) இயக்கப்படும்.

இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், 6 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் பிரயாக்ராஜ், மாணிக்பூா், ஜபல்பூா், நாக்பூா், வாராங்கல், விஜயவாடா, ஓங்கோல், நெல்லூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி என்ஜின் எண்ணெய் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ரூ. 1 கோடி போலி பொருள்கள் பறிமுதல்

விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூளையாக செயல்பட்டவா் கைது

அடிப்படை குடிமைப் பணிகளில் முந்தைய ஆம் ஆத்மி அரசு தோல்வி - அமைச்சா் பா்வேஷ் சாடல்

காா், ஆட்டோ மீது டிடிசி பேருந்து மோதி இருவா் காயம்

தில்லியில் ஒரே நாளில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் விநியோகம் 76% அதிகரிப்பு

SCROLL FOR NEXT