வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

DIN

திறமையும் தன்னம்பிக்கையும் வளரும். உடனிருப்போரை ஊக்கப்படுத்துவீர்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். குழந்தைகளால் பெருமை அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சலுகைகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புது நுணுக்கங்களைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் தொழிலாளர்களை அனுசரித்து நடப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் செயல்திறன் அதிகரிக்கும். கலைத் துறையினர் பிறரிடம் கவனமாக இருக்கவும். பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

குடும்பத்தில் குதூகலம் நிறையும். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். சரியான நேரத்தில் ஆகாரத்தை உண்பீர்கள். தொழிலில் தடைகளை முறியடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் அதிக வருவாய் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் உடல் உபாதைகளால் சஞ்சலம் அடைவீர்கள். மாணவர்கள்

படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். முயற்சிகள் பலனளிக்கும். நேர்வழியில் செயல்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வியாபாரிகள் கவனத்துடன் இருக்கவும். விவசாயிகள் வரப்பு விவகாரங்களில் முடிவைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். கலைத் துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு உண்டு. பெண்கள் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் விருப்பப்பட்ட துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். நண்பர்களின் ஆதரவைத் தக்க வைப்பீர்கள். தோற்றத்தில் பொலிவும் உடல் வலிமையும் கூடும். புதிய வீடுகளுக்கு மாறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரிகள் வருவாயைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் கணவருடன் சகஜமாக பழகுவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடினமாக உழைப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். கடன்கள் வசூலாகும். போட்டியும், பொறாமையும் குறையும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் வெளியூரில் பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் போட்டிக்குத் தகுந்தவாறு செயல்படுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் கண்காணிப்பு இருக்கும். கலைத் துறையினர் சோம்பேறித்தனத்தை விட்டொழிக்கவும். பெண்கள் உறவினர்களிடம் கவனமாக இருக்கவும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சுபச் செய்திகள் கிடைக்கும். ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் இணக்கமாக இருக்கவும். வியாபாரிகள் தரமான பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் போட்டிக்குத் தக்கவாறு செயல்படுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் அமைதியைத் தக்க வைப்பீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும். உறவினர்களைப் புரிந்துகொள்வீர்கள். அனைத்து விஷயங்களையும் திறம்பட செயல்படுத்துவீர்கள். உடனிருப்போருக்கு ஆலோசனைகளை அளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புகழ் கிடைக்கும். வியாபாரிகள் சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். விவசாயிகள் மகசூலை அதிகரிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு வருவாய் அதிகரிக்கும். மாணவர்கள் மதிப்பெண்களைக் கூட்டிக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 7.

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்களை அடைப்பீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருவாய் உண்டு. வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் சமமான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சி வெற்றி பெறும். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெற தாமதமாகும். பெண்கள் கணவரிடம் ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவர்கள் கடினமாக உழைத்துப் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம்} பிப்ரவரி 8, 9.

பேச்சினால் பிறரை கவர்வீர்கள். வருவாய்க்குக் குறைவிருக்காது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பிறருக்கு உதவுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் நட்புடன் இருப்பார்கள். வியாபாரிகள் சரக்கு வாகனங்களுக்கு செலவழிப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் புதிய பதவிகளால் புகழ் பெறுவீர்கள். கலைத் துறையினர் உதவிகளைப் பெற சிரமப்படுவீர்கள். பெண்கள் நன்கு யோசித்து முடிவெடுக்கவும். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்டு நடக்கவும்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 10, 11, 12.

ஆன்மிகப் பெரியோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். எதிர்ப்பால் பாதிக்கப்பட மாட்டீர்கள். எளியவர்களுக்கு உதவுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் திருப்தியாகச் செய்வீர்கள். வியாபாரிகள் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு அளிப்பார்கள். கலைத் துறையினருக்கு வருமானம் வருவதில் தாமதமாகும். பெண்கள் வீண்பேச்சைத் தவிர்க்கவும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 13.

வங்கிக் கடன் கிடைக்கும். அரசு சலுகைகள் கிடைக்கும். வசதிகளைப் பெருக்குவீர்கள். முக்கிய பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற வெகுமதி உண்டு. வியாபாரிகள் கூட்டாளிகளிடம் கவனமாகப் பழகவும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்பாராத பயணங்களைச் செய்ய நேரிடும். கலைத் துறையினர் பிறரிடம் கவனமாகப் பழகவும். பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பணப்புழக்கம் சீராக இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம், மனவளம் சிறப்பாக இருக்கும். தெய்வ வழிபாடு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அறிவுரைகளைக் கேட்பீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் உறுதியுடன் இருப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..