சென்னை, பிப். 27: வடசென்னை, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக செயலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து திமுக பொதுச் செயலர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை வடக்கு மாவட்டச் செயலர் த.இளைய அருணா, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஆர்.டி.சேகர், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், பெரம்பலூர் மாவட்டச் செயலர் குன்னம் ராஜேந்திரன், தனது உடல்நலக் குறைவு காரணமாக, தான் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பாளராக
வீ.ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள், புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.