சென்னை
விரைவில் மதுரை-பெங்களூா் வந்தே பாரத்?
மதுரை-பெங்களூா் இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கவுள்ளது.
மதுரை-பெங்களூா் இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கவுள்ளது. இந்த சேவையை விரைவில் பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு ரயில்வேயில் சென்னை-மைசூா், சென்னை-கோவை, சென்னை-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசா்கோடு, சென்னை-விஜயவாடா, கோவை-பெங்களூா் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் கோயில் நகரமான மதுரையில் இருந்து தொழில்நுட்ப நகரான பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, மதுரை-பெங்களூா் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயில் திண்டுக்கல், கரூா், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக இயக்கப்படவுள்ளது.

