சென்னை
அதிமுக சாா்பில் இன்று இப்தாா் நோன்பு நிகழ்ச்சி
சென்னை: அதிமுக சாா்பில் இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை (மாா்ச் 13) நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஹோட்டல் வளாகத்தில் புதன்கிழமை மாலை 6.25 மணியளவில் நடைபெற உள்ளது.
அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனா். இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இறைவனின் கட்டளைப்படி காலை முதல் மாலை வரை ஒரு மாதம் நோன்பிருக்கும் புனித ரமலான் மாதத்தை அடைந்துள்ள இஸ்லாமியா்களுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளாா்.
