உடனுக்குடன்

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!
சென்னை புறநகர், மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!
தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..!
குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு
கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!
சென்னை புறநகர், மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!
தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..!
குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

மார்ட்டின் ஸ்கார்செஸி படம் போலிருக்கும் வீர தீர சூரன்: எஸ்.ஜே.சூர்யா

வீர தீர சூரன் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது....
வீர தீர சூரன் போஸ்டர், மார்ட்டின் ஸ்கார்செஸி, எஸ்.ஜே.சூர்யா.
வீர தீர சூரன் போஸ்டர், மார்ட்டின் ஸ்கார்செஸி, எஸ்.ஜே.சூர்யா. கோப்புப் படங்கள்.
Published on: 
Updated on: 
1 min read

மார்ட்டின் ஸ்கார்செஸி படம் போலிருக்கும் வீர தீர சூரன் என நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியுள்ளார். நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்த வாரம் வெளியாகிறது என்பதால் படக்குழு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ஒரு பகுதியாக நேர்காணல் ஒன்றில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ், துஷாரா, அருண் குமார் உள்ளிட்டோர் பேசியுள்ளனர்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எச்.ஆர். பிக்சர்ஸ் யூடியூப் பக்கம் சார்பாக எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில் எஸ். ஜே. சூர்யா பேசியதாவது:

வீர தீர சூரன் படத்தில் நடிகர் விக்ரம் சாரை தூள் படத்தில் பார்த்தமாதிரி ஒரு நல்ல கமர்ஷியல் படத்தில் பார்க்கப்போகிறீர்கள். இது மாஸான கிளாசிக் படமாக இருக்கும்.

இந்தப் படத்தின் இயக்குநர் அருண்குமார் தீவிரமான மார்ட்டின் ஸ்கார்செஸி ரசிகர். இந்தப் படமும் மார்ட்டின் ஸ்கார்செஸி மேக்கிங் போலவே இருக்கும். மார்ட்டின் ஸ்கார்செஸி கிராமத்தில் இரு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என்றார்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸியின் படங்கள் எதார்த்தமான த்ரில்லர் படங்களுக்காக பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com