மனிதர்களுக்கு செல்லப் பிராணியாக, வீடுகளில், தெருக்களில் வளர்ப்பு விலங்காக இருப்பவை நாய்கள். அறிவு மிகுந்தது, பாசம் மிகுந்தது, துப்பு துலக்குவதில் வல்லமை கொண்டது என்பதால், காவல் துறையினரின் நண்பனாகவும் இந்த நாய்கள் இருக்கின்றன.
நாட்டு நாய்கள் எனப்படும் தெருநாய்கள் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் சுற்றித் திரிகின்றன. வீடுகள், நிறுவனங்களில் பாதுகாப்புக்காகவும், ஆசைக்காகவும், பெருமைக்காகவும் அல்சேஷன், பெமேரியன் போன்ற உயர்வகுப்பு நாய்கள் வளர்க்கப்படுகின்றன. சிலர் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து நாய்களை வாங்கி வளர்ப்பதும் உண்டு.
நாயை குழந்தைபோல வளர்ப்போரும் உண்டு. நாய்கள் இறந்ததால் அதனால் பாதிக்கப்பட்டு, பல நாள் பட்டினி கிடந்தவர்களும் உண்டு. இப்படிப் பற்பல பெருமை மிக்கவை நாய்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி சில நாள் தடுப்பு ஊசி போட்டு வந்தனர். இப்போது "ரேபிட்' எனும் வகையிலான நவீன ரக ஊசி (அசபஐ தஅஆஐப யஅலஐச) போடப்
படுகிறது.
நாயால் கடிபட்டவர் அலட்சியமாக இருந்துவிட்டால், "ஹைட்ரோசோபியா' எனும் நோய் ஏற்படும். இந்த நோய்க்கு மருந்து கிடையாது. அவர்களுக்கு தண்ணீரைப் பார்த்தால் பயம் ஏற்படும். குளிக்கவோ அல்லது குடிக்கவோ கூட அஞ்சுவர். இறுதியில் மரணம்தான்!
வெறி நாயால் கடிபட்டவர் குரைத்து, குரைத்தே இறந்து விடுவர் என்று கூறுவதும் உண்டு.
நாய்களைக் கொல்லக் கூடாது என்ற அரசின் உத்தரவால், நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சாலையில் திரியும் நாய்களால் வாகன விபத்துகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்போரும், படுகாயங்களுடன் உயிருக்கு போராடுவோரும் ஏராளம். நாள்தோறும் பலர் நாய்கள் கடித்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது தொடர்கதையாகிவருகிறது.
தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால்தான் பெருமளவு பிரச்னைகள் ஏற்படுகின்றன. 2000-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறாத நாய்களை சுகாதாரத் துறையினர் பிடித்து கொன்று விடுவது உண்டு.
2001-ஆம் ஆண்டில் அப்போதைய, (இப்போதும்தான்) மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் முயற்சியால் அசஐஙஅக ஆஐதபஏ இஞசபதஞக (ஈஞஎந) தமகஉ 2001 என்ற சட்டம் இயற்றப்பட்டது.
இதன்படி, நாய்கள் கொல்லப்பட்டால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இதையடுத்து, நாய்களை கூண்டு வைத்து பிடித்துக் கொல்லும் முறை அடியோடு நிறுத்தப்பட்டது.
உள்ளாட்சி அமைப்பின் அதிகாரி, தொண்டு நிறுவனப் பிரதிநிதி, சுகாதாரத் துறை அதிகாரி, கால்நடை மருத்துவர் அடங்கியக் குழுவினரின் மேற்பார்வையில் நாய்களைப் பிடிக்க வேண்டும்.
இவற்றுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, பின்னர் பிடித்த இடத்திலேயே விட்டுவிட வேண்டும்.
இல்லையெனில், காட்டிலோ ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலோ விட்டுவிட வேண்டும். இந்த இரண்டு முறைகளில்தான் நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆனால், கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்தாலும் அந்த நாய் அதே பகுதியில்தான் திரிகிறது. மேலும், எவ்வளவு தொலைவில் விட்டு வந்தாலும், அதன் இருப்பிடத்துக்கு வந்துவிடுகிறது.
மேலும், நாய்களைப் பிடிக்கச் செல்லும்போது, சிலர் அதற்கு ஆதரவு தெரிவித்தாலும் வேறு பலர் நாய்களைப் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற
னர். அதற்குக் காரணம், நாய்களால்தான் திருட்டு பயமோ, அன்னியர் நடமாட்டமோ இல்லை என்பதுதான்.
நாய்களால் கடிபட்டு ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் நாள்தோறும் சராசரியாக 25 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சராசரியாக 150 பேரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதன்படி, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்தோறும் சுமார் 8 ஆயிரம் பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 2 ஆயிரம் பேரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்கின்றனர். சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வார்கள்.
சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் மீது மோதாமல் இருக்க வாகன ஓட்டிகள் நிலைதடுமாறுகின்றனர். இதனால் பலரும் விபத்துகளில் சிக்கி இறக்கின்றனர்.
நாய்கள் மீது மோதியதால் விபத்து நேரிட்டது என்று போலீஸôர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்வதில்லை. காப்பீட்டுச் சலுகை கிடைக்காது என்பதே இதற்கு காரணம்.
நாய்கள் என்பது மக்களுக்கு உற்றத் தோழனாக இருந்தாலும், தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால், வெறிநாய்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதே உண்மை.
எனவே, நாய்களை கொல்லக் கூடாது என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். நாய் என்பது அரிய வகை உயிரினம் கிடையாது. இது அன்புக்கு பாசமாக இருக்கும் அதே வேளையில், ஆபத்தை ஏற்படுத்தும் விலங்காகவும் உள்ளது.
எனவே, நாய்களை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கையை எடுக்கவோ, வேறுவழியில்லாதபோது அவற்றைக் கொன்றுவிடவோ உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வேண்டும்.
விலங்குகள் சரணாலயத்தில் நாய்களுக்கு தனிப் பிரிவை ஏற்படுத்தலாம். மாநிலம் முழுவதும் பிடிக்கப்படும் நாய்களை அங்கு வைத்து வளர்க்கும் வகையிலான நடவடிக்கையை எடுக்கலாம்.
பொதுமக்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் நாய்கள் விஷயத்தில் அரசு அலட்சியம் காட்டாமல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.