மாளிகைத்திடல் சிவன் கோயில்

இங்கு கிழக்கு நோக்கிய மூன்று நிலை முதன்மை கோபுரத்துடன் உள்ளது சிவன்கோயில். இறைவன் சுந்தரேசுவரர் கிழக்கு நோக்கியும், இறைவி சௌந்தர்யநாயகி தென்முகம் கொண்டுள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் , சங்கு சக்கரங்களுடன் கூடிய துர்க்கை இருவர் மட்டுமே மட்டுமே உள்ளனர். பின்புறம் உள்ள மேற்கு திருமாளிகை பத்தியில் கம்பீரமான பெரிய விநாயகர் உள்ளார், அருகில் சிவலிங்கம் அதன் அம்பிகையும் உள்ளனர். அருகில் சிதைந்த நிலையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ள சன்னதி. மிகுந்த அழகுடன் பைரவர் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். அருகில் சூரியன் உள்ளார். முன்னூறு ஆண்டுகட்கு முன் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டகோயில். முழுவதும் செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வெட்டாற்றின் வட கரையில் உள்ளது, திருக்கருகாவூர் தென் கரையில் உள்ளது. 100 மீட்டர் இக்கரையில் சிதைந்து நிற்கும் இக்கோயிலை காண்பதற்கே ஆளில்லை. பெரும்பாலான நேரங்களில் பூட்டப்பட்டே இருக்கும். உடனடியாகத் தேவை உழவாரபணிகள், தினசரி வழிபாடு மற்றும் திருப்பணி. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன் - 7639606050.
மாளிகைத்திடல் சிவன் கோயில்
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com