மக்களைத் தவறாக வழிநடத்தும் போலி மருத்துவ விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் வலியுறுத்தினார்.
மும்பையில், அமெரிக்காவின் இந்திய வம்சாவளி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் 9-வது உலக மருத்துவக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கருத்தரங்கைத் தொடங்கி வைத்து வித்யாசாகர் ராவ் பேசியதாவது:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர்கள் ஏராளமானோர் அமெரிக்காவில் மிகச் சிறப்பாக மருத்துவப் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது.
இந்தியாவிலும் அவர்கள் மருத்துவ ஆராய்ச்சிகள், மருத்துவ நலன் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்த முன்வர வேண்டும்.
இந்தியாவை அச்சுறுத்தி வரும் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.
மக்களைத் தவறாக வழிநடத்தும் போலி விளம்பரங்கள் தற்போது அதிக அளவில் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுகின்றன. அதில் குணப்படுத்த முடியாத நோய்களைக் கூட பூரணமாக குணப்படுத்துவதாக விளம்பரம் செய்கின்றனர்.
எனவே, போலி மருத்துவ விளம்பரங்களுக்கு அரசு தடைவிதிக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.