

நாடு முழுவதும் 12 விமான நிலையங்களின் புதிய முனைய கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார்ச்.10) திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு விமான நிலைய புதிய முனைய கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
புதுதில்லி, குவாலியர், புணே, கோலாப்பூர், ஜபல்பூர், லக்னோ, அலிகார், ஆசம்கர், சித்ரகூட், மொராதாபாத், ஷ்ரவஸ்தி மற்றும் அடம்பூர் ஆகிய 12 விமான நிலையங்களில் புதிய முனைய கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்த விமான நிலையங்களில் வருடத்திற்கு சுமார் 6.2 கோடி பயணிகளை கையாள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடப்பா, ஹூப்ளி மற்றும் பெலகாவி ஆகிய 3 விமான நிலையங்களில் புதிய முனைய கட்டடங்கள் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட 15 விமான நிலைய மேம்பாட்டு திட்டத்திற்கான மொத்த செலவு ஏறத்தாழ ரூ.9,811 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.