சம்பலில் சர்ச்சை சுவரொட்டிகள்: போலீஸார் விசாரணை

சம்பலில் கடைகளின் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பல் (கோப்புப்படம்)
சம்பல் (கோப்புப்படம்)
Updated on
1 min read

சம்பலில் கடைகளின் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தின் நரௌலி நகரில் உள்ள கடைகளின் சுவர்களில் 'காஸாவை விடுவிப்போம், பாலஸ்தீனத்தை விடுவிப்போம்' என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இஸ்ரேலிய பொருட்களைப் புறக்கணிக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வாசகங்களும் அந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றன.

சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கி ஆறு முதல் ஏழு நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பனியதர்போலீஸ் அதிகாரி ராம்வீர் சிங் ஞாயிற்றுக்கிழமை பிடிஐயிடம் தெரிவித்தார்.

தக் லைஃப் முதல் பாடல்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!

சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து கூடுதல் தகவல்களும் சேகரிக்கப்பட்டன.

இந்த சுவரொட்டிகள் குறித்து சில நாள்களுக்கு முன்பு தெரிய வந்ததாகவும் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார். காஸாவில் இஸ்ரேல் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் 51,065 போ் உயிரிழந்துள்ளனா், 1,16,505 போ் காயமடைந்துள்ளனா் என்று காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com