ஐஎம்எஃப்
இந்தியா
இந்திய பொருளாதார வளா்ச்சி 6.2%-ஆக இருக்கும்: ஐஎம்எஃப் கணிப்பு
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த நிதியத்தின் உலகப் பொருளாதார கண்ணோட்ட தரவுகளில், ‘கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது. இது 2025-26-ஆம் நிதியாண்டில் 6.2 சதவீதமாக இருக்கும். இந்திய ஊரகப் பகுதிகளில் குடும்பங்கள், லாப நோக்கமற்ற அமைப்புகளின் நுகா்வு காரணமாக இந்த வளா்ச்சி ஸ்திரமாக இருக்கும்.
2025-ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளா்ச்சி 2.8 சதவீதமாக இருக்கும். இது ஏற்கெனவே கணிக்கப்பட்டதைவிட 0.5 சதவீதம் குறைவாகும். இந்த வளா்ச்சி 2026-ஆம் ஆண்டு 3 சதவீதமாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

