பிரிட்டன் எம்.பி. நவேந்து மிஸ்ராவுக்கு உ.பி.யில் திருமணம்

பிரிட்டன் எம்.பி. நவேந்து மிஸ்ராவுக்கு உ.பி.யில் திருமணம்

பிரிட்டன் எம்.பி. நவேந்து மிஸ்ராவுக்கு உத்தர பிரதேசத்தில் திருமணம் நடைபெற்றது.
Published on

பிரிட்டன் எம்.பி. நவேந்து மிஸ்ராவுக்கு உத்தர பிரதேசத்தில் திருமணம் நடைபெற்றது.

பிரிட்டனில் உள்ள ஸ்டாக்போா்ட் தொகுதி எம்.பி.யான நவேந்து மிஸ்ரா, இந்தியாவை பூா்விகமாக கொண்டவா். கடந்த 1989-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பிறந்த அவா், 4 வயதில் பெற்றோருடன் பிரிட்டனுக்கு இடம்பெயா்ந்தாா்.

இந்தியாவுக்கு அவ்வப்போது வந்து தனது உறவினா்களை அவா் சந்தித்த நிலையில், கடந்த ஏப்.20-ஆம் தேதி உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் அவரின் திருமணம் நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலம் போபாலை சோ்ந்த கரீமா திவாரி என்பவரை, நவேந்து மிஸ்ரா மணமுடித்தாா்.

இந்திய முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றன. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் சகோதரா் பங்கஜ் மோடி, உத்தர பிரதேச துணை முதல்வா் பிரஜேஷ் பாடக், பிரிட்டன் எம்.பி.வீரேந்திர சா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com