

ஆலிவ் எண்ணெயில் சில வகைகள் இருப்பினும், அமிலத்தன்மை குறைவாக உள்ள விர்ஜின் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவது நல்லது.
சமையலுக்கு மட்டுமின்றி ஆலிவ் எண்ணெயை சரும அழகுக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.
சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை வறண்டு விடாமல் பாதுகாக்கும் தன்மை உடையது.
தினமும் ஆலிவ் எண்ணெயைத் தேய்த்துக் குளிக்கலாம். இதனால் சருமம் வழவழப்பாக இருக்கும். குளிக்கும் நீரில் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் கலந்து குளிக்கலாம்.
அதேபோன்று ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் செல்கள் புத்துணர்ச்சி அடையும். சருமம் பொலிவு பெறும்.
கண்களைச் சுற்றியுள்ள கரு வளையங்கள், சுருக்கங்களை போக்குவதற்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
தலைமுடி வளர்ச்சிக்கும் ஆலிவ் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. தலையில் ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வரலாம். இதனால் கூந்தல் கருமையாக அடர்த்தியாக வளரும்.
இதுதவிர, ஆலிவ் எண்ணெய் முகப்பருக்களை மறைய வைக்கிறது. முகப்பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க பயன்படுகிறது.
ஒட்டுமொத்த சரும அழகுக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் ஆலிவ் எண்ணெயை அனைத்து வயதினரும் தொடர்ந்து பயன்படுத்தலாம். சரும ஒவ்வாமை உள்ளவர்கள் மட்டும் தங்கள் மருத்துவரின் ஒப்புதலுடன் பயன்படுத்துங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.