பாவை நோன்பைக் கடைப்பிடிப்பது எப்படி?

உடலுக்கு ஊட்டம் தரும் உணவு துறக்க வேண்டும். பால், நெய், தயிர் தவிர்த்து, கன்னிப் பெண்கள் நோன்பினைக் கைக்கொள்ள வேண்டுமாம்.
பாவை நோன்பைக் கடைப்பிடிப்பது எப்படி?
Updated on
1 min read

உடலுக்கு ஊட்டம் தரும் உணவு துறக்க வேண்டும். பால், நெய், தயிர் தவிர்த்து, கன்னிப் பெண்கள் நோன்பினைக் கைக்கொள்ள வேண்டுமாம்.

அதிகாலை நீராடி, திருப்பாவை பாடி, கண்ணன் சந்நிதி நாடி அவன் நினைவில் கரைந்திருக்க வேண்டும். நாள் ஒரு பாடலாக முப்பது பாடல்களை மும்முறை பாட வேண்டும். இதன் மூலம் கன்னியருக்கு நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர் என்பது பெரியோர் வாக்கு.

மார்கழி மாதத்தில் அனைத்துக் கோயில்களிலுமே அதிகாலை பூஜை உண்டு. கோயில்களில் மட்டும்தானா? நாம், வீட்டையும் தூய்மைப் படுத்தி, எளிமையாக இறைவனை வழிபடலாமே! அதிகாலை வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து, கோலமிட்டு அலங்கரித்து, பூக்களைப் பரப்பி இறைவனை இறைவியை வரவேற்க விளக்கு ஏற்றி, மனதுக்குப் பிடித்த தெய்வத்தின் தோத்திரங்களைச் சொல்லி, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்ச்சாதம் என நைவேத்தியங்கள் படைத்து வழிபடலாம். விரதம் இருக்கும் கன்னிப் பெண்கள் நெய், பால், தயிர் உள்ளிட்டவற்றைத் தவிர்க்கலாம்.

ஆண்டாள், திருவில்லிபுத்தூரில் வடபெருங்கோயில் உடையானுக்கு பூமாலையும் பாமாலையும் சூட்டி நோன்பு இருந்தாள். அதிகாலை தோழியர் புடைசூழ, குளிர் நீரில் குளித்து, கோயில் சென்று துதித்தாள். அதனாலேயே இன்றும், மார்கழி மாத அதிகாலை ஆலய வழிபாடு சிறக்கிறது. எளியோருக்கும் பலன் தருகிறது. தெள்ளிய தமிழ்ப் பாக்களான திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றைப் பாடி பரமனைத் தொழ எளியோராலும் முடியும் அல்லவா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com