

சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில் உள்ள அருள்மிகு ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் திருக்கோயிலில் கடந்த 2-ஆம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருத்தேர் வடத்தை உபயதாரர்கள் திருமுடிவாக்கம் மோகன் நாயுடு, துர்கா நகர் சிங்கதுரை, லட்சுமிபுரம் காமராஜ் உள்ளிட்டோர் இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடத்தை பிடித்து தேரை இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தை தொடர்ந்து ரங்கநாயகி தாயார் சபை சார்பில் பஜனை நடைபெற்றது. பஜனைக்குப் பின்னர் பக்தர்களுக்கு வஸ்திர தானம், அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், விழாக் குழுவினரும் செய்திருந்தனர்.
வரும் 11 ஆம் தேதி (புதன்கிழமை) சப்தாவரணம் புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.