கோவிலில் நாம் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு! 

கோவிலுக்கு செல்பவர்கள் நம்மை அறியாமலே ஒரு சில தவறுகள் செய்கிறோம். அது என்ன என்பதைத் தெரிந்து, அதைத் திருத்திக்கொள்வோம். 
கோவிலில் நாம் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு! 
Updated on
1 min read

கோவிலுக்கு செல்பவர்கள் நம்மை அறியாமலே ஒரு சில தவறுகள் செய்கிறோம். அது என்ன என்பதைத் தெரிந்து, அதைத் திருத்திக்கொள்வோம். 

• கோயிலுக்கு செல்லும் முன் குளித்து, சுத்தமாக செல்ல வேண்டும். கோயிலுக்கு வெறுங்கையுடன் செல்லாமல் கடவுளுக்குப் படைக்க நம்மால் முடிந்த பூ, பழம் எதையாவதை வாங்கிச் செல்லலாம். 

• சிவன் கோயில் என்றால் வில்வத்தையும், பெருமாள் கோவிலென்றால் துளசியை வாங்கி சென்று அர்ச்சனைக்கு கொடுக்கலாம். கோபுரத்தை வணங்கிவிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும்.

• நமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் கால் நீட்டுதல் கூடாது.

• விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, மூன்று தோப்புக்கரணம் போட வேண்டும்.

• விநாயகரை ஒரு தரமும், சூரியனை 2 தரமும், அம்பாளையும், விஷ்ணுவையும் 4 தரமும், ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

• மூலவருக்கு அபிஷேகம் நடந்தால், பிரகாரத்தை சுற்றக்கூடாது. அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.

• நமது வேண்டுதல்களையெல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். சிவன் நாமம், நாராயண நாமம் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. 

• கோவிலுக்குள் வீட்டு விவகாரங்களையோ, மற்றவர்களைப் பற்றி தேவையில்லாமல் பேசுவதோ கூடாது. 

• ஆலயத்திற்குள் ஒருவரை ஒருவர் கும்பிடக்கூடாது. ஏனெனில், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும். சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.

• ஆலய வளாகத்திற்குள் அசுத்தம் செய்தல், குப்பையைப் போடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

• கோவிலிலிருந்து பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.

• சண்டிகேசுவரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடுவது, கைதட்டுவது போன்றவை செய்தல் கூடாது. சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேசுவரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

• சிவன் கோவிலில் காலபைரவரையும், பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அண்டாது. 

• கோவிலுக்கு சென்று விட்டு நேரே வீட்டிற்கு செல்ல வேண்டும். 

கோயிலுக்கு செல்பவர்கள் இதையெல்லாம் கடைப்பிடித்தால், கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்ட முழுபலனும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com