வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும் முறை

கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார்.
வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும் முறை
Updated on
1 min read

கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார்.

பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது இந்த விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் இருந்தாலும், சிறப்பாக வைகுண்ட ஏகாதசியில் பலர் விரதம் மேற்கொள்கின்றனர்.

விரதமுறை

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முந்தைய தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ரநாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாகப் பொழுது போக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை காய்கறிகளைச் சமையலில் சேர்த்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் அவசியம் இடம்பெற வேண்டும்.

துவாதசியில் அதிகாலையில் சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது. ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக் கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவதாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என்று மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதமிருப்பவர்கள் சகல சௌபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com