தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும் எனத் தெரிந்துகொள்வோம்.
Astro
Astro
Updated on
4 min read

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

ஏப்ரல் 21 (திங்கள் கிழமை)

மேஷம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

ரிஷபம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமைகாணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கடகம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்:

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கன்னி:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம். வெளுத்தது எல்லாம் பால் என்று நினைப்பீர்கள். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

துலாம்:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் சூர்யன், சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் - புதன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேல் அதிகாரிகளி டம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

தனுசு:

கிரகநிலை:

ராசியில் குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மகரம்:

கிரகநிலை:

ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

கும்பம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 10.51 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் . தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com