கொ.மா.கோதண்டம் நாவல்கள்

கொ.மா.கோதண்டம் நாவல்கள் - கொ.மா. கோதண்டம்; பக்.620; ரூ.600; காவ்யா வெளியீடு, சென்னை- 24. )044 - 2372 6882.
கொ.மா.கோதண்டம் நாவல்கள்
Updated on
1 min read

கொ.மா.கோதண்டம் நாவல்கள் - கொ.மா. கோதண்டம்; பக்.620; ரூ.600; காவ்யா வெளியீடு, சென்னை- 24. ) 044 - 2372 6882.
மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நூலாசிரியர் எழுதிய மூன்று நாவல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. படிக்க எடுத்தால் பாத்திரங்களோடு ஒன்றிப் போகும் அளவுக்கு இயல்பான சித்திரிப்புகளுடன் அமைந்திருப்பது இத் தொகுப்பில் உள்ள நாவல்களின் பலம்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை கசப்பானது. அடிப்படை வசதிகள் என்றால் என்னவென்றே அறியாத அந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை காதல் உணர்வுகளுடன் இணைத்துத் தருவது "ஏலச் சிகரம்'. இரண்டாம் நாவலான "குறிஞ்சாம் பூ', விருதுநகர் மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் வாழும் மனிதர்கள் குறித்து பேசுகிறது. அந்த மக்கள் அதிகாரிகளால் படும் துயரங்கள் குறித்து இந்த நாவல் பேசுகிறது.
தேயிலைத் தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் இலங்கையில் ஒடுக்கப்படுவது, சொந்த நாட்டிலோ அகதிகளாகப் பார்க்கப்படுவது ஆகியவற்றைச் சித்திரிக்கிறது "ஜன்ம பூமிகள்' நாவல். இந்த நாவலுக்காக இலங்கைக்குச் சென்று அங்கு தான் பெற்ற அனுபவங்களை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை, அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை அற்புதமாகச் சித்திரிக்கும் நாவல்களின் சிறந்த தொகுப்பு இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com