செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள் - மு.கருணாநிதி; பக். 80; ரூ.60; முல்லை பதிப்பகம், சென்னை- 40; 98403 58301.
கருணாநிதி நூற்றாண்டை நோக்கியுள்ள நிலையில், இந்த நூல் வெளியாகியுள்ளது. தமிழ்ச் செம்மொழிக்காக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு, கருணாநிதியின் அறிக்கை, தமிழாய்வு மத்திய நிறுவன அலுவலகத் திறப்பு விழாவில் கருணாநிதி ஆற்றிய உரை, அறிவிப்பையடுத்து முரசொலியில் அவர் எழுதிய 7 கடிதங்கள், செம்மொழி விருது பெற்றோர் பட்டியல் போன்றவை இடம்பெற்றுள்ளன.
1918-ஆம் ஆண்டில் நீதிக் கட்சியின் மாநாட்டில் தமிழ்ச் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விவரம் குறித்த தகவல் பெரிய ஆச்சரியம்தான். கோவையில் 2010-இல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த கருணாநிதியின் அறிவிப்பு உருக்கமாகவே இருக்கிறது.
தமிழைச் செம்மொழியாக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர் என்றாலும், முதல் வெளிநாட்டவர் கால்டுவெலும், அவர் தமிழின் மீது காட்டிய தனிச்சிறப்பும் விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளது. செம்மொழி அறிவிப்புக்காக, கருணாநிதியின் முயற்சிகளும், 2004-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்புகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.
செம்மொழிக்கான மத்திய அரசின் ஆணைகள் குறித்த விவரம் ஆங்கிலத்தில் அப்படியே இடம்பெற்றுள்ளது பயனுள்ளது. தமிழ் மொழியின் மீது பற்றுள்ளவர்களும், ஆர்வலர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
செம்மொழி பட்டியலில் தமிழ் வருவதற்கான காரணங்கள், அவசியங்கள், வரலாற்று தகவல்கள் ஆவணங்களுடன் சொல்லப்பட்டுள்ளது.
எதிர்காலத் தலைமுறையினரும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.