பண்டிதமணி

பண்டிதமணியின் வாழ்க்கையைப் படிக்க நேர்ந்தால் தன்முனைப்புடன் முன்னேறிவிடக்கூடிய தெம்பு ஏற்படும்.
பண்டிதமணி
Updated on
2 min read

பண்டிதமணி - சோமலெ; பக். 128; ரூ. 50; முல்லை பதிப்பகம், கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40; ✆ 98403 58301.

ஏழு மாதம்கூட பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து தமிழ்ப்பணி ஆற்றியவர் பண்டிதமணி.

பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கு மூன்று வயதில் இளம்பிள்ளைவாதம் பீடிக்கிறது. எனினும் பதினைந்து வயது வரை அவரை இந்நோய் துன்பப்படுத்தவில்லை.

திண்ணைப் பள்ளியில் படிக்கிறார். அதை அவர் கூறும்போது, "யான் ஆறேழ் ஆண்டு உடையவனாக இருக்கும் பொழுதுதான், திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றேன். ஆத்திச்சூடி, உலகநீதி முதலிய சிறு நூல்களைப் படிக்க நேர்ந்தபோது, அச்சிறுசிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது' என்கிறார்.

பொருளீட்டலுக்காக இலங்கைக்குச் செல்கிறார். 14 வயதில் இளம்பிள்ளைவாத நோய் வன்மை காட்டத் தொடங்கியதால், மீண்டும் மகிபாலன்பட்டிக்கே வந்துவிடுகிறார்.

உடல் வளம் குன்றியிருந்ததை ஈடுசெய்யும் வகையில் அவரது உள்ளம் அறிவுத் துறைபால் திரும்பியது. தாமே தேடித் தேடி கற்று அறிவுப் பெருக்கம் செய்கிறார். தாமே பயின்ற பண்டிதமணி, புலவரெல்லாம் பாராட்டும் வண்ணம் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்ததற்கு, மகா வித்துவான் அரசஞ் சண்முகனார் பேருதவியாக இருந்தார்.

வடமொழி வல்லுநர் தருவை நாராயண சாஸ்திரியாரிடம் ஐந்து ஆண்டுகள் வடமொழி பயின்றிருக்கிறார்.

பாண்டித்துரைத் தேவர் அறிமுகத்தால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நடத்தும் புலவர்களில் ஒருவராகப் பண்டிதமணி இணைந்தார்.

பண்டிதமணியின் தமிழாய்வுப் பணிகள், அக்கால தமிழறிஞர்களுடனான அவருடைய தொடர்புகள் என அவருடைய வாழ்வை மிகச் சிறப்பாக விவரித்துள்ளார் தமிழ்ப் பயண இலக்கியத் தந்தை என்று புகழப்படும் அறிஞர்சோமலெ.

வாழ்வில் ஏதுமற்றவர் கூட, பண்டிதமணியின் வாழ்க்கையைப் படிக்க நேர்ந்தால் தன்முனைப்புடன் முன்னேறிவிடக்கூடிய தெம்பு ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com