

ஐபிஎல் வரலாற்றில் சேஸிங்கில் தோனி படைத்த சாதனைக்கு ஐபிஎல் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
லக்னௌவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட், கேப்டன்சி (தலைமைப் பண்பு), பேட்டிங் என அசத்திய தோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபராக தோனி சாதனை படைத்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் சேஸிங்கில் 30 முறை நாட் அவுட் (ஆட்டமிழக்காமல்) இருந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
மொத்தமாக 41 முறை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி அதில் 30 முறை ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஐபிஎல் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்தவர்கள்
1. எம்.எஸ்.தோனி -30
2. ரவீந்திர ஜடேஜா - 27
3. தினேஷ் கார்த்திக் -24
4. டேவிட் மில்லர் - 23
5. விராட் கோலி - 22
6. யூசுஃப் பதான் -22
7. ஏபிடி வில்லியர்ஸ்- 19
8. சுரேஷ் ரெய்னா - 19
9. ரோஹித் சர்மா -18
10. கைரன் பொல்லார்ட் -17
11. ஹார்திக் பாண்டியா- 17
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.