

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு சிஎஸ்கே ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டிய நிலையில் தற்போது உண்மையாகிவிட்டது.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ’குட்டி ஏபிடி’ என்றழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் முன்னாள் தெ.ஆ. வீரரைப் போன்று அதிரடியாக 360 டிகிரியிலும் பேட்டிங் செய்கிறார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் எந்த ஒரு அணியும் அவரை ஏலத்தில் எடுக்காமல் இருந்த இவர் இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.
அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மஞ்சள் நிற புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.
இதனால், இவர் சிஎஸ்கேவில் இணைகிறாரா எனக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 21 வயதாகும் இவரை தற்போது, 8ஆவது வெளிநாட்டு வீரராக சிஎஸ்கே அணி தேர்வு செய்துள்ளது.
ஏலத்தில் 7 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இருந்தனர். குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக தற்போது, 8ஆவது வீரராக இவரை சிஎஸ்கே எடுத்துள்ளது.
இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு நீண்ட நாள்களாக நன்றாக தொடக்க வீரர்களும் மிடில் ஆர்டர் பேட்டர்களும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
ஷேக் ரஷீத் தொடக்க வீரராக களமிறங்கிய பின்னர் அந்தக் குறை ஓரளவுக்கு சரியாகியுள்ளதால், டெவால்ட் ப்ரீவிஸ் அணியில் தேர்வாகியுள்ளதால் சிஎஸ்கே அணிக்கு சிறந்த மிடில் ஆர்டர் ஒருவர் கிடைத்த மாதிரிதான் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டெவால்ட் ப்ரீவிஸ் 230 ரன்களை 133.72 ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.
இந்நிலையில், சிஎஸ்கே அணி டெவால்ட் ப்ரீவிஸ் அணியில் இணைந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.