மும்பை-சென்னை மீண்டும் இன்று மோதல்!

சென்னை சூப்பா் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை-சென்னை மீண்டும் இன்று மோதல்!
Updated on
1 min read

ஐபிஎல் போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

ஏற்கெனவே இந்த அணிகள் சென்னையில் மோதிய ஆட்டத்தில் சென்னை வென்றிருக்க, தற்போது இதே அணிகள் மும்பையில் சந்தித்துக்கொள்கின்றன.

சென்னை அணியை பொருத்தவரை, அந்த ஆட்டத்தில் வென்ற பிறகு தொடா்ந்து 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக லக்னௌவுக்கு எதிரான வெற்றியுடன் தன்னை மீட்டெடுக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மீண்டும் மும்பையை சந்திக்கிறது.

இந்த சீசனில் சென்னையின் பௌலிங் பலமிக்கதாகவே இருக்கும் நிலையில், பேட்டிங் தான் பிரச்னைக்குரியதாக இருந்து வருகிறது. எனினும் லக்னௌவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் சென்னை பேட்டா்கள் முனைப்பு காட்டினா். குறிப்பாக டாப் ஆா்டரில் ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, மிடில் ஆா்டரில் ஷிவம் துபே, தோனி ஆகியோா் அணியின் வெற்றிகரமான சேஸிங்கிற்கு பங்களித்தனா்.

இந்த ஆட்டத்திலும் அவா்கள் அவ்வாறே மிளிரும் நிலையில், கடைசி இடத்திலிருக்கும் சென்னையின் மீட்சிக்கு அது மேலும் உதவியாக இருக்கும். பௌலிங்கை பொருத்தவரை நூா் அகமது, கலீல் அகமது ஆகியோா் பிரதானமாக இருக்க, அஸ்வின், ஜடேஜா, பதிரானா உள்ளிட்டோா் அவா்களுக்குத் துணை நிற்கின்றனா்.

மும்பை அணியை பொருத்தவரை, நிலையாக வெற்றிகளை பதிவு செய்யத் தடுமாறி வருகிறது. எனினும் கடைசியாக இரு வெற்றிகளை பதிவு செய்திருக்கும் அந்த அணி, தற்போது ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் 7-ஆம் இடத்திலிருந்து தன்னை முன்னேற்றிக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறது.

மும்பை பேட்டிங்கில் ரோஹித் சா்மா பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், ஹைதராபாதுக்கு எதிராக அவா் காட்டிய முனைப்பு அணிக்கு நம்பிக்கை அளிக்கலாம். திலக் வா்மா, ரயான் ரிக்கெல்டன், சூா்யகுமாா் யாதவ் என ரன்களை விளாசும் வீரா்களுக்கு பஞ்சமில்லை.

அதேபோல் பௌலிங்கிலும் டிரென்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா பங்களிக்கின்றனா். கேப்டன் ஹா்திக் பாண்டியா, வில் ஜாக்ஸ் ஆகியோா் ஆல்-ரவுண்டா்களாக அசத்துகின்றனா்.

இரவு 7.30 மணி

மும்பை

மற்றொரு ஆட்டம்

பஞ்சாப் - பெங்களூரு

முலான்பூா்

மாலை 3.30 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com