சேப்பாக்கில் டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்குவாரா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்குவது குறித்து...
டெவால்ட் ப்ரீவிஸ்
டெவால்ட் ப்ரீவிஸ்படம்: எக்ஸ் / சிஎஸ்கே
Updated on
1 min read

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஃபிளெமிங் பதிலளித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ் சிஎஸ்கே அணியில் ஏப்.18இல் தேர்வானார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ’குட்டி ஏபிடி’ என்றழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் முன்னாள் தெ.ஆ. வீரரைப் போன்று அதிரடியாக 360 டிகிரியிலும் பேட்டிங் செய்கிறார்.

சிஎஸ்கே அணியில் தேர்வானாலும் இதுவரை பிளேயிங் லெவனில் தேர்வாகவில்லை.

சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டரில் பிரச்னையாக இருக்கிறது. டெவால்ட் ப்ரீவிஸ் அணியில் களமிறங்கினால் அந்தப் பிரச்னை தீருமென ரசிகர்கள் கருதுகிறார்கள்.

இது குறித்த கேள்விக்கு பயிற்சியாளர் ஃபிளெமிங், “ அவரைப் போல ஒருவரையே ஆப்ஷனாகவே வைத்துள்ளோம். இந்தத் தொடர் முழுவதும் உள்ள வேறு வீரர்களும் இருக்கிறார்கள்.

டெவால்ட் ப்ரீவிஸ் அணிக்கு தேர்வானது கூடுதல் ஆதாயம்தான். ஆனால், யாரைத் தேர்ந்தெடுத்தால் அணி சரியாக இருக்குமென யோசித்து வருகிறோம். இது குறித்து விவாதித்து வருகிறோம்” என்றார்.

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே இந்தப் போட்டியிலாவது வெல்வார்களா என அதன் ரசிகர்கள் காத்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com