வேலையை விட்ட தந்தை, 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் தாய்... சூர்யவன்ஷியின் முழுமையான பேட்டி!

ஐபிஎல் போட்டியில் 14 வயதில் சதமடித்த சூர்யவன்ஷி அளித்த முழுமையான பேட்டி...
குழந்தையாக தந்தையுடனும், 14 வயதிலும் வைபவ் சூர்யவன்ஷி.
குழந்தையாக தந்தையுடனும், 14 வயதிலும் வைபவ் சூர்யவன்ஷி.படங்கள்: எக்ஸ்/ சஞ்சீவ் கோயங்கா, ஏபி.
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி போட்டிக்குப் பிறகு முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பது தனக்கு சாதாரணமானது எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவா்களில் 209/4 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 15.5 ஓவா்களில் 212/2 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தானின் 14 வயது வீரா் வைபவ் சூா்யவன்ஷி, நடப்பு சீசனில் அதிவேக சதம் விளாசி சாதனைப் படைத்தாா்.

போடிக்குப் பிறகு வைபவ் சூர்யவன்ஷி தனது குடும்பம், அடுத்த என்ன செய்ய வேண்டும், எப்படி அணிக்கு தேர்வானது என்பது குறித்தும் பேசியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி பேசியதாவது:

முதல்பந்தில் சிக்ஸர் அடிப்பது சாதாரணமானது

முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பது எனக்கு சாதாரணமான விஷயம். இந்திய அணிக்காக யு-19 விளையாடியுள்ளேன். அதிலும் உள்ளூர் போட்டிகளிலும் முதல் பந்தில் சிக்ஸர்கள் அடித்துள்ளேன்.

முதல் 10 பந்துகள் விளையாடுவதில் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. எனக்கு சாதகமான இடத்தில் பந்து விழுந்தால் நிச்சயமாக அடிப்பேன் என்பது மட்டும் எனது மனதில் தெளிவாக இருக்கும்.

நான் முதல்போட்டியில் விளையாடுகிறேன் என்றெல்லாம் நினைக்கமாட்டேன். எனக்கு எதிராக சர்வதேச பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள், மிகப்பெரிய போட்டி எல்லாம் தெரியும். ஆனால், நான் என்னுடைய ஆட்டத்தைதான் ஆடுகிறேன்.

எனது வெற்றிக்கு பெற்றோர்களே காரணம்

நான் இப்போது என்னாவாக இருக்கிறோனோ அதற்கு எனது பெற்றோர்களே காரணம். எனது பயிற்சிக்காக எனது அம்மா எனக்காக உணவு சமைக்க அதிகாலையில் 3 மணிக்கே எழுந்துவிடுவார். இரவு 11 மணிக்குதான் தூங்குவார். கிட்டதட்ட 3 மணி நேரம் உறக்கம்தான்.

எனது தந்தை எனக்காக அவரது வேலையை விட்டார். எனது அண்ணாதான் எங்களது குடும்பத்தைப் பார்த்துகொள்கிறார்.

எனது தந்தை என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். கடினமாக உழைப்பவர்களுக்கு கடவுள் கைவிடமாட்டார். இந்தச் சாதனைகள் எல்லாம் எனது பெற்றோர்களே காரணம்.

இந்திய அணிக்கு தேர்வாகும்வரை கடினமாக உழைப்பேன்

நான் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். அந்த அளவுக்கு செல்லும்வரை எனது உழைப்பை கைவிட மாட்டேன். இந்திய அணிக்காக நன்றாக விளையாட வேண்டும்.

ராஜஸ்தான் அணியில் விளையாட இதற்காகதான் நிண்ட காலமாக பயிற்சி எடுத்து வந்தேன். நான் நினைத்தமாதிரி நடந்ததுக்கு மகிழ்கிறேன்.

பயிற்சியில் நான் நன்றாக விளையாடினேன். அப்போது பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர், அணியின் மேலாளர் ரோமி உடன் இருந்தார்கள். என்னை அணியில் எடுப்பதாகக் கூறினார்கள். என்னை ராகுல் திராவிட் சாருடன் அறிமுகப்படுத்தினார்கள்.

அணியில் பலரும் எனக்கு ஆதர்வு அளித்தார்கள். ராகுல் சார் தலைமையில் பயிற்சி எடுப்பது எனக்கு கனவு நனவானது போல் இருந்தது. அடுத்து என்ன நடந்தாலும் எனக்கு கவலையில்லை என்பதுபோல் அவர்கள் என்னை உற்சாகம் ஊட்டினார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com