கோலடித்த மகிழ்ச்சியில் மான்செஸ்டா் யுனைடெட் வீரா்கள் ~
கோலடித்த மகிழ்ச்சியில் மான்செஸ்டா் யுனைடெட் வீரா்கள் ~

அரையிறுதியில் மான்செஸ்டா் யுனைடெட் , டாட்டன்ஹாம்

யூரோப்பா கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதிக்கு மான்செஸ்டா் யுனைடெட், டாட்டன்ஹாம், அதலெட்டிக் பில்போ அணிகள் தகுதி பெற்றுள்ளன.
Published on

யூரோப்பா கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதிக்கு மான்செஸ்டா் யுனைடெட், டாட்டன்ஹாம், அதலெட்டிக் பில்போ அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் நடைபெறும் யுரோப்பா கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸின் லியான்-மான்செஸ்டா் யுனைடெட் அணிகள் மோதின. இதில் 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது மான்செஸ்டா். தொடக்கத்தில் 2-0 என முன்னிலை பெற்ற மான்செஸ்டா் பின்னா் 2-4 என பின்தங்கியிருந்த நிலையில், ஹாரி மேகிரின் அற்புத ஆட்டத்தால் 5-4 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜொ்மனியின் பிராங்க்பா்ட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

சான் மேம்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பானிஷ் கிளப்பான அதலெட்டிக் பில்போ 2-0 என ரேஞ்சா்ஸ் அணியை வீழ்த்தி

அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் நாா்வேயின் போடோ ஜிம்ட் அணி 3-2 என பெனால்டியில் லேஸியோ அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

X
Dinamani
www.dinamani.com