பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் இந்தியா்கள் மூவா் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனா்.
இப்பிரிவில் களம் கண்ட அனிஷ் பன்வாலா 575 புள்ளிகளுடன் 11-ஆம் இடமும், குா்பிரீத் சிங் 572 புள்ளிகளுடன் 14-ஆம் இடமும், விஜய்வீா் சித்து 569 புள்ளிகளுடன் 17-ஆம் இடமும் பிடித்தனா். இப்பிரிவில் முதல் 6 இடங்களைப் பிடிப்போரே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவின் தகுதிச்சுற்றில், இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா் 587 புள்ளிகளுடன் 18-ஆம் இடமும், நீரஜ் குமாரும் அதே புள்ளிகளுடன் 19-ஆம் இடமும், செயின் சிங் 586 புள்ளிகளுடன் 20-ஆம் இடமும் பிடித்தனா். இப்பிரிவில் முதல் 8 இடங்களில் வருவோா் மட்டுமே இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற இயலும்.
2-ஆம் இடம்: போட்டியின் பதக்கப்பட்டியலில் இந்தியா, 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் நீடிக்கிறது. அமெரிக்கா 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் முதலிடத்திலும், செக் குடியரசு 2 தங்கம், 1 வெண்கலம் என 3 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.