புதுச்சேரி, நவ. 13: இடை பருவத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால், பெற்றோருக்கு பயந்து, 2 பள்ளி மாணவிகள் சனிக்கிழமை புதுச்சேரி வந்தனர். அவர்களை போலீஸôர் பிடித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஊட்டியைச் சேர்ந்த ஷர்மிளா, சுஜித்ரா ஆகியோர், அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அப்பள்ளியில் அண்மையில் இடைப் பருவத் தேர்வு நடந்துள்ளது. அதற்கான மதிப்பெண்கள் அட்டை வெள்ளிக்கிழமை மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் ஷர்மிளா, சுஜித்ரா ஆகியோர் தோல்வியடைந்தனர்.
இதனால் பெற்றோர்கள் அடிப்பார்கள் என்று பயந்த அந்த மாணவிகள் அவரவர் வீட்டில் தலா 500 எடுத்துக்கொண்டு ஊட்டியிருந்து வெள்ளிக்கிழமை மாலை சென்னை சென்றுள்ளனர். பெற்றோர்கள் மகள்களை காணவில்லை என்று ஊட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸôரும் விசாரித்து வந்தனர்.
சென்னை சென்ற மாணவிகள், அங்கிருந்து பஸ் ஏறி, சனிக்கிழமை புதுச்சேரி வந்தனர். அவர்கள் சந்தேகத்துக்கிடமான வகையில், பஸ் நிலையத்தில் திரிந்ததால், உருளையன்பேட்டை போலீஸôர் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் தேர்வில் தோல்வி அடைந்ததால், பெற்றோருக்கு பயந்து, புதுச்சேரி வந்தது தெரியவந்தது.
பின்னர் உருளையன்பேட்டை போலீஸôர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, முகவரிகளை விசாரித்து, அப்பகுதி காவல் நிலையத்துக்கும், பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஊட்டியிலிருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.