ஓய்வூதிய அலுவலகம் புதிய முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கருவூலக் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஈ.வெ.கி.சம்பத் மாளிகையில் இயங்கி வந்தது.
நந்தனத்துக்கு மாற்றம்: தற்போது அந்த அலுவலகம் ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலகக் கட்டடம் (தரைத்தளம்), 571, அண்ணாசாலை, கால்நடை மருத்துவமனை வளாகம், நந்தனம், சென்னை -35 என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை (ஜூலை 3) முதல் புதிய முகவரியில் அலுவலகம் செயல்படும் என்று கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.