

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குள காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இறந்த வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி காவல் துறை இன்று பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளாக உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் 4 காவலர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களில் ரகு கணேஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் இந்த வழக்கு விசாரணையை இன்றுதான் சிபிசிஐடி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரகு கணேஷை சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ள நிலையில், உடனடியாக கைது செய்யப்பட்டுவிட்டாரா அல்லது விசாரணைக்குப் பிறகு முறைப்படி கைது பற்றி அறிவிக்கப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.