

திருச்சி: திருச்சி கலைஞர் அறிவாலயத்தை கரோனோ சிகிச்சைக்கான தனிமைப்படுத்துல் முகாமுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் திமுக சார்பில் அனுமதி கடிதம் அளிக்கபட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் கலைஞர் அரங்கை கரோனோ சிகிச்சைக்கா மையமாக பயன்படுத்திக் கொள்ள திமுக சார்பில் அனுமதி வழங்கி மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அளித்துள்ளார்.
இதேபோல, திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகேயுள்ள கலைஞர் அறிவாலயத்தையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருச்சி மேற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக-வின் முதன்மைச் செயலருமான கே.என். நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து செவ்வாய்க்கிழமை அனுமதி கடிதம் அளித்தார்.
கலைஞர் அறிவாலயத்தை கரோனோ சிகிச்சைக்காக தனிமைப்படுத்துதல் முகாமுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கடிதத்தில் தெரிவித்துள்ளார். கே.என். நேரு சார்பில், ஏற்கெனவே கரோனோ நிவாரண உதவித் தொகையாக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நன்கொடை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.