

சென்னை: அரக்கோணம்-சேலம் இடையே நெடுந்தொலைவு மின்சார விரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அரக்கோணத்தில் இருந்து திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 5 நாள்களில் (வாரத்தில் 5 நாள்கள்) அதிகாலை 5.15 மணிக்கு மின்சார விரைவு சிறப்பு ரயில் (06087) புறப்பட்டு, அதேநாள் காலை 10.50 மணிக்கு சேலத்தை அடையும்.
மறுமாா்க்கமாக, சேலத்தில் இருந்து திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் பிற்பகல் 3.30 மணிக்கு மெமு விரைவு சிறப்பு ரயில்(06088) புறப்பட்டு, அதேநாள் இரவு 9.10 மணிக்கு அரக்கோணத்தை வந்தடையும். இருமாா்க்கவும் இந்த ரயில் சேவை ஜனவரி 6-ஆம் தேதி தொடங்குகிறது.
முழுவதும் முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (ஜன.5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.